திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாணார்பட்டி அருகே முன்னாள் பாஜக நிர்வாகி பாலகிருஷ்ணன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தமிழகத்தின் சீர்கெட்ட சட்ட ஒழுங்கினால் தினந்தோறும் சர்வ சாதாரணமாக நிகழும் குற்றச்சம்பவங்களுள் ஒன்றாக தற்போது இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. மனதை பதைபதைக்கவைக்கும் இச்சம்பவத்தில், குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவாய அரசை வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.
இனியும், இது போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்தால் தமிழகம்
சார்பாக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பாலகிருஷ்ணனை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு தமிழக பாஜக என்றைக்கும் துணை நிற்கும் என்பதைக் கூறிக்கொண்டு அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.