திருப்புவனம் காவல்நிலைய மரண விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் சுமார் 2 மணி நேரம் நீதிபதி விசாரணை நடத்தினார்.
சிவகங்கையில் காவல்துறை விசாரணையின்போது இளைஞர் கொல்லப்பட்ட விவகாரத்தில் சம்மந்தப்பட்ட தனிப்படை காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.
மானாமதுரை டிஎஸ்பி சண்முக சுந்தரமும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 4ம் நாளாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி சண்முக சுந்தரத்திடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.