டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கர்வ் கூப் எஸ்யூவி மாடலின் விலையை 13 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியுள்ளது.
மற்ற மாடல்களின் விலைகளிலும் டாடா மோட்டார்ஸ் மாற்றங்களைச் செய்துள்ளது. குறிப்பாக, டியாகோ, டியாகோ NRG மற்றும் டிகோர் மாடல்களின் விலையையும் அந்நிறுவனம் உயர்த்தியுள்ளது.
டாடா கர்வ் மாடலின் விலை ஏற்றத்தால் வாடிக்கையாளர்கள் ஹூண்டாய் கிரெட்டா, மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா உள்ளிட்ட மாடல்களின் பக்கம் தங்களின் கவனத்தைச் செலுத்தக் கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.