நாமக்கல்லில் Swiggy, Zomato போன்ற செயலிகளுக்கு மாற்றாக, ZAAROZ என்ற புதிய உணவு டெலிவரி செயலி ஹோட்டல் உரிமையாளர்களால் தொடங்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் அதிக கமிஷன் மற்றும் மறைமுக கட்டண விவகாரம் காரணமாகக் கடந்த 1-ம் தேதி முதல் ஸ்விக்கி, சொமோட்டோ செயலிகளுக்கான உணவு விநியோகத்தை ஹோட்டல் உரிமையாளர்கள் நிறுத்தி வைத்தனர்.
இந்த செயலிகளுக்கு மாற்றாக ஹோட்டல் உரிமையாளர்கள் ஒன்றிணைந்து ZAAROZ என்ற புதிய உணவு டெலிவரி செயலியைத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் ZAAROZ செயலியின் தொடக்க நிகழ்ச்சி நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்றது. இதில் நாமக்கல் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் ராம்குமார் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து பேசியுள்ள அருள்குமார், ZAAROZ செயலி மூலம் உணவுகள் 45 நிமிடங்களில் டெலிவரி செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும் ஸ்விக்கி, சொமோட்டோவை போல மறைமுக கட்டணங்கள் ஏதும் இல்லாததால் உணவுப் பொருட்கள் ஹோட்டல் விற்பனை விலைக்கே வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.