கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.
பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன், கடலூர் – அழப்பாக்கம் இடையிலான ரயில்வே லெவல் கிராசிங் கேட் எண் 170 வழியாக தண்டவாளத்தை இன்று காலை 07:45 மணியளவில், கடக்க முயன்றது. அந்நேரத்தில் அங்கு வந்த விழுப்புரம் –மயிலாடுதுறை பயணிகள் ரயில் (எண் 56813) எதிர்பாராத விதமாக பள்ளி வேன் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் வேன் சிதறியது, இதில் பயணித்த 4 மாணவர்களில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். டிரைவர், குழந்தை பாதுகாவலர், 2 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து ரயில்வே பாதுகாப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேட் கீப்பர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்
கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த 2 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், பலத்த காயமடந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.