கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே, பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில், உயிரிழந்த 2 மாணவர்களின் குடும்பத்திற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே, பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில், இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலம் குறித்த பல கனவுகளோடு பயணித்த ஒன்றுமறியா குழந்தைகளுக்கு நேர்ந்த இந்த விபத்து, தமிழகம் முழுவதையுமே வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
தங்கள் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்தக் கடினமான நேரத்தைக் கடந்து வரும் வலிமையை, இறைவன் அவர்களுக்கு அருளட்டும். காயமுற்ற குழந்தைகள் அனைவருக்கும், உயர்தர சிகிச்சை வழங்க, தமிழக அரசை அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.