கடலூர் செம்மங்குப்பம் ரயில் விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தம்பியின் உடல்கள் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டன.
செம்மங்குப்பத்தில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில், சின்ன காட்டு சாகை பகுதியைச் சேர்ந்த திராவிட மணி என்பவரின் மகள் சாருமதி, மகன் செழியன் மற்றும் தொண்டமாநத்தம் பகுதியைச் சார்ந்த நிமலேஷ் ஆகியோர் உயிரிழந்தனர்.
இதை அடுத்து, சாருமதி மற்றும் செழியன் ஆகியோரின் உடல்கள் உடற்கூராய்வு செய்யப்பட்டு, சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டன.