விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் திருத்தோரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த ஸ்தலமாக இத்திருக்கோயில் விளங்குகிறது.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இத்திருக்கோயில் ஆனி பிரம்மோற்சவ விழா கடந்த 28 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான 10 வது நாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றதை தொடர்ந்து 11 ம் நாள் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
முதலில் சென்ற பெரிய தேரில் சொக்கநாதர் பிரியாவிடை உடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து தேரோடும் வீதிகளில் பவனி வந்தனர். பக்தர்கள் சிவநாமத்துடன் சிவ வாத்தியங்கள் முழங்க மேள தாளங்கள் முழங்க தேரினை தேரோடு வீதிகளில் வடம் பிடித்து இழுத்துச்சென்றனர்.
அதனை தொடர்ந்து சிறிய தேரில் மீனாட்சி தேராடும் வீதிகளில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரில் வலம் வந்த சொக்கநாதரையும், மீனாட்சியையும் வழிபட்டு மகிழ்ந்தனர்.