விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு அல்காரஸ், டெய்லர் பிரிட்ஸ், அரினா சபலென்கா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறு ஆட்டத்தில் பிரிட்டன் வீரர் கேமரூன் நோரியை ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 6-3, 6-3, 6-3 என்ற செட்கணக்கில் அல்காரஸ் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
இதேபோல அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், ரஷியாவின் கரன் கச்சனாவ் உடன் மோதினார். இதில் அதிரடியாக ஆடிய டெய்லர் பிரிட்ஸ் 6-3, 6-4, 1-6, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.’
தொடர்ந்து நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் கஜகஸ்தானின் அரினா சபலென்கா, ஜெர்மனியின் லாரா சிக்மெண்ட் உடன் மோதினார். முதல் செட்டை 4-6 என இழந்த சபலென்கா அடுத்த இரு செட்களை 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.