ஜம்மு-காஷ்மீரின் பூஞ்சில் உள்ள கல்வி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான ஆவணங்கள் தீயில் கருகிச் சேதமடைந்தன.
பூஞ்ச் பகுதியில் தலைமை கல்வி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து அங்குச் சென்ற தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் அலுவலகத்திலிருந்த ஏராளமான ஆவணங்கள் தீயில் கருகிச் சேதமடைந்தன. மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.