இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் முதலீட்டு நிறுவனத்தில் முதுநிலை ஆலோசகர் பணியில் சேர்ந்துள்ளார்.
கடந்த 2001ஆம் ஆண்டு இதே நிறுவனத்தில் தொடக்க நிலைப் பணியாளராக 5 ஆண்டுகள் ரிஷி சுனக் பணிபுரிந்துள்ள நிலையில், தற்போது முதுநிலை ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள தங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதுடன், புவிசார் அரசியல் கண்ணோட்டத்தையும் பொருளாதார சூழ்நிலையையும் ரிஷி சுனக் பகிர்ந்து கொள்வார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.