ஓமலூர் அருகே மயானத்தை ஆக்கிரமிக்க முயன்ற கிறிஸ்துவர்களை விரட்டியடித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே பெரமச்சூர் பகுதியில் உள்ள மயானத்தில், அந்த பகுதியைச் சேர்ந்த இந்துக்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மகேஸ்வரி என்பவரின் உடல் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரை அடக்க செய்யப்பட்ட இடத்தில் உறவினர்களில் சிலர் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தும், சிலுவையை வைத்தும் ஜெபம் செய்துள்ளனர்.
இதனை அறிந்த மக்கள், மயானத்தை ஆக்கிரமிக்க முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்துக்கள் அடக்கம் செய்யப்பட்ட இந்து மயானத்தை, கிறிஸ்துவ மயானமாக மாற்ற சிலர் முயற்சிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.