ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து கீழே தள்ளிவிட்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்ட ஹேமராஜ் குற்றவாளி எனத் திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பயணித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹேமராஜ் என்பவர், பாலியல் தொல்லை அளித்ததுடன் ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டார்.
இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஹேமராஜ் கைது செய்யப்பட்டு வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், ஹேமராஜ் குற்றவாளி என நீதிபதி மீனா குமாரி தீர்ப்பளித்தார்.
தண்டனை விவரங்கள் திங்கட்கிழமை வெளியாக உள்ள நிலையில், 2 ஆண்டுகள் முதல் சாகும் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.