விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டிக்கு கார்லஸ் அல்காரஸ், ஜானிக் சின்னர் ஆகியோர் முன்னேறி உள்ளனர்.
லண்டனில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலியின் ஜானிக் சின்னர், செர்பியாவின் ஜோகோவிச்சுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய ஜானிக் சின்னர் 6க்கு 3, 6க்கு 3, 6க்கு 4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
முன்னதாக நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸை எதிர்கொண்டார்.
இதில் 6க்கு 4, 5க்கு 7, 6க்கு 3, 7க்கு 6 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று அல்காரஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜானிக் சின்னர், அல்காரஸ் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.