மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கிய நிலையில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமுடன் பயணம் செய்தனர்.
மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே ஆகஸ்ட் 17ஆம் தேதி வரையும் ஊட்டி – மேட்டுப்பாளையம் இடையே சனிக்கிழமை முதல் ஆகஸ்ட் 18-ம் தேதி வரையும், சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் எனச் சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்தது.
அதன்படி, மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு 200க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் மலை ரயில் புறப்பட்டுச் சென்றது.
மலை ரயில் சேவை தொடங்கியதால் உற்சாகமடைந்த சுற்றுலாப் பயணிகள் ஆனந்தத்துடன் ரயிலில் பயணித்தனர்.