சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்ம பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
புகழ்பெற்ற இக்கோயிலில் கடந்த 4ஆம் தேதி லட்சுமி நரசிம்ம பிரம்மோற்சவ விழா தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இன்று, பட்டாடை, தங்க ஆபரணங்கள் அணிந்தபடி, திருப்பல்லக்கில் எழுந்தருளிய நரசிம்ம பெருமாளைப் பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் தரிசனம் செய்தனர்.
மேளதாளம் முழங்க முக்கிய வீதிகளில் நடைபெற்ற சுவாமியின் பல்லக்கு ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்றனர்.