திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீப்பற்றி விபத்துக்குள்ளானதால் 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு புறப்பட வேண்டிய இன்டர்சிட்டி, சதாப்தி ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இதேபோல், சென்னை சென்ட்ரல் – மைசூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில், சென்னை – பெங்களூரு இடையே இயக்கப்படும் டபுள் டெக்கர் ரயில், பிருந்தாவன் ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.
ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், பயணிகளின் வசதிக்காக திருத்தணியில் இருந்து திருவள்ளூர் வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.