ஏமனில் கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதில் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏமனில் செவிலியராக பணியாற்றி நிமிஷா பிரியா அந்நாட்டைச் சேர்ந்த தலால் அப்டோ மெஹ்தி என்பவரை விஷ ஊசி போட்டுக் கொன்றதால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் வரும் 16ம் தேதி தூக்குத் தண்டனை விதித்துள்ளது. மரண தண்டனையைத் தடுத்து நிறுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரத்தில் வரையறுக்கப்பட்ட எல்லைக்கு மீறி அரசு எதுவும் செய்ய முடியாத நிலை உள்ளதாகவும்,
இழப்பீடாகப் பணம் அளித்து பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வருவது என்பது தனிப்பட்ட பேச்சுவார்த்தையாக உள்ளது என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.