சேலம் காவல் நிலையம் அருகே மனைவி கண்முன்னே கணவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திரேஷ்புரத்தைச் சேர்ந்த அப்பு என்ற மதன் குமார் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
திரேஷ்புரத்தில் நடந்த கொலை வழக்கில் முன்ஜாமின் பெற்று வெளியே வந்த அவர், சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்திடச் சென்றார்.
காவல் நிலையம் அருகே உள்ள உணவகத்தில் மனைவியுடன் உணவு சாப்பிடச் சென்றபோது 7 பேர் கொண்ட மர்ம கும்பல், மதன் குமாரை அரிவாளால் தாக்கி கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றது.
தகவலறிந்து வந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து சேலம் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.