தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மீன் வளர்ப்பு தொட்டிக்குள் விழுந்த புள்ளிமானை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
ஆண்டிப்பட்டி – பெரியகுளம் சாலையில் உள்ள வனவியல் பயிற்சி கல்லூரி வனப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட புள்ளிமான்கள் உள்ளன.
இதில் தண்ணீர் தேடி அப்பகுதியில் சுற்றித்திரிந்த புள்ளி மான் ஒன்று மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் உள்ள மீன் வளர்ப்பு தொட்டிக்குள் தவறி விழுந்தது.
இதுகுறித்து தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், புள்ளிமானைப் பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.