ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சத்தியமங்கலத்தில் வசித்துவரும் 5 ஆயிரத்திற்கும் மேலான மக்களுக்குப் பல ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா வழங்கப்படாமல் இருந்து வருகிறது.
இதுகுறித்து பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், ஆத்திரமடைந்த மக்கள் சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் அங்குக் கூடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.