நாடாளுமன்றத் தேர்தலின் போது முதலமைச்சர் புகழ்ந்து பேசிய பார்வை மாற்றுத் திறனாளி உதவித்தொகை கேட்டு ஆட்சியரிடத்தில் மனு அளித்தார்.
பழங்காநத்தத்தைச் சேர்ந்த ஶ்ரீகாந்த் கடந்த ஆண்டு கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பிரெய்லி முறையில் வடிவமைக்கப்பட்ட போட்டித் தேர்வு புத்தகங்களைப் படித்து, வங்கி நடத்திய தேர்வில் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் அவர் தனியார் வங்கி வேலைக்குத் தேர்வானது திமுக அரசின் சாதனை என நாடாளுமன்றத் தேர்தலின் போது முதலமைச்சர் ஸ்டாலின் மக்கள் மத்தியில் பேசி வந்தார்.
இந்நிலையில் அந்த இளைஞர், தனக்கு உதவித்தொகை மற்றும் அரசுப்பணி வழங்கக் கோரி ஆட்சியரிடத்தில் மனு அளித்தார்.
மேலும் பல முறை கோரிக்கை விடுத்தும் அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.