சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய 2 சாட்சிகளை வரும் 17ஆம் தேதி நேரில் ஆஜராகச் சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு மரவனேரி பகுதியில் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சிறையில் அடைக்கப்பட்ட 3 பேரும் சிறையிலிருந்தபடி காணொலி வாயிலாக ஆஜராகினர்.
அப்போது, வழக்கில் இதுவரை 9 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், 10 மற்றும் 11ஆவது சாட்சிகள் வரும் 17ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும், 3 பேரின் நீதிமன்ற காவலை நீட்டித்தும் நீதிபதி மலர்விழி ஆணையிட்டார்.