2026ம் ஆண்டு மக்கள் விரோத ஆட்சியை அகற்றும் ஆண்டாக இருக்கும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
காமராஜரின் 123வது பிறந்தநாளையொட்டி சென்னை புரசைவாக்கத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய தமிழருவி மணியன், தமிழகத்தில் அனைவரும் நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டிய ஒரே தலைவர் காமராஜர் எனத் தெரிவித்தார்.
மேலும் ஜி.கே.மூப்பனார் வழியில் காமராஜரின் சீரிய பணிகளைப் போற்றுபவர் ஜி.கே.வாசன் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய ஜி.கே.வாசன், 2026ம் ஆண்டு மக்கள் விரோத ஆட்சியை அகற்றும் ஆண்டாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றக் கூட்டணிக்கு அடிப்படை கட்சியாகத் தமிழ் மாநில காங்கிரஸ் இருக்கும் என்றும் அவர் கூறினார்.