மேட்டூர் அணையின் 16-ம் கண் மதகு அருகே நாட்டு வெடிகுண்டு வீசி மீன்பிடிக்கும் செயலில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர் கனமழையால் கடந்த ஜூன் 29-ம் தேதி மேட்டூர் அணை நிரம்பிய நிலையில், 16-ம் கண் மதகு வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
தற்போது மதகு மூடப்பட்டதால் ஆங்காங்கே குளம்போல் தேங்கி நிற்கும் தண்ணீரில் டன் கணக்கில் ரக ரகமான மீன்கள் காணப்படுகின்றன.
இந்நிலையில் சமூக விரோத கும்பல் சிலர் தண்ணீரில் நாட்டு வெடிகுண்டு வீசி மீன்களைப் பிடிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேட்டூர் அணைக்கு 200 மீட்டர் தொலைவில் வெடி வெடிக்கப்படுவதால் அணைக்குப் பாதிப்பு ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது.