ராஜஸ்தானில் கட்டணம் வசூலிப்பது தொடர்பான வாக்குவாதத்தில் வாகன ஓட்டியைச் சுங்கச்சாவடி ஊழியர் செங்கல்லால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்மாநிலத்தில் ஹனுமன்கரில் உள்ள கோஹாலா சுங்கச்சாவடி வழியாக வந்த வாகனம் ஒன்றுக்கு கட்டணம் வசூலிக்கும்போது, ஊழியருக்கும், வாகன ஓட்டிக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதில், சுங்கச்சாவடி ஊழியர் அருகில் கிடந்த செங்கற்களை எடுத்து வாகன ஓட்டியைத் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.