மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் இறப்பு சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக அவரது சகோதரர் நவீன்குமார் புகார் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து அவரது சகோதரர் மருத்துவமனையில் இறப்பு சான்றிதழ் கேட்டதற்கு, ரசீதுகள் திருப்புவனம் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவும், அதனைப் பெற்று வந்த மனு அளிக்குமாறு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அஜித்குமாரின் இறப்பு சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக அவரது சகோதரர் நவீன்குமார் புகார் தெரிவித்துள்ளார்.
மேலும் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இறப்பு சான்றிதழ் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.