ராணிப்பேட்டை மாவட்டம், திமிரியில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்தோற்சவம் மற்றும் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக கோயிலுக்கு முன்னால் நடைபெற்ற துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.
மகாபாரத போர் யுத்த காட்சியை விளக்கும் விதமாக நாடக நடிகர்கள் தத்ரூபமாக வேடமிட்டு நடித்துக் காண்பித்தனர்.
மேலும் துரியோதனன் இறந்த துக்கத்தை அவரது தாய் காந்தாரி வெளிப்படுத்தும் காட்சி அனைவரையும் புராண காலத்திற்கே கூட்டிச் சென்றது.
பின்னர், காப்புக் கட்டி விரதம் இருந்த பக்தர்கள், பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.