சிபிஎஸ்இ 8-ஆம் வகுப்புக்குப் புதிதாக வெளியிடப்பட்டுள்ள சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில், டெல்லி சுல்தான் மற்றும் முகலாயர்கள் இந்துக்களுக்கு எதிராக நிகழ்த்திய அட்டூழியங்கள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.
புதிய சமூக அறிவியல் பாடப் புத்தகத்தை, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் சமீபத்தில் தயாரித்து வெளியிட்டது.
அதில், அக்பர், பாபர், அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இந்துக்களுக்கு எதிராக நடந்த கொடுமைகள் விவரிக்கப்பட்டுள்ளன.
மேலும், டெல்லி சுல்தான்களின் எழுச்சி, வீழ்ச்சி பற்றியும், அவர்களை எதிர்த்து நின்ற விஜயநகர பேரரசு, மராட்டியர்கள் மற்றும் சீக்கியர்களின் எழுச்சி பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது.