மதுரை கள்ளழகர் கோயிலில் ஆடித்திருவிழா ஆகஸ்ட் 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருந் திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டுக்கான ஆடித்திருவிழாவானது ஆகஸ்ட் 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதனைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 9ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடித்திருவிழாவில் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.