மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி. சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசனுக்கு வழங்கப்பட்டிருந்த அலுவலக வாகனம் திரும்ப பெறப்பட்டு விட்டதால், அவரது வீட்டில் இருந்து டிஎஸ்பி அலுவலகத்திற்கு நடந்து சென்ற வீடியோ வைரலானது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அலுவல் பணி காரணமாக டிஎஸ்பி சுந்தரேசனிடம் இருந்து வாகனம் வாங்கப்பட்டதாகவும், திரும்பி தந்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த டிஎஸ்பி சுந்தரேசன், உயர் அதிகாரிகளின் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தன் மீது மாவட்ட காவல்துறை அழுத்தம் தருவதாக கூறிந்திருந்தார். இதுதொடர்பாக, தஞ்சை மண்டல டிஐஜி ஜியாவுல் ஹக் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையின் முடிவில் டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்ய அவர் திருச்சி சரக ஐஜிக்கு பரிந்துரை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.