ராஜஸ்தானில் ரயில் எஞ்சினில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பீவர் மாவட்டத்தில் உள்ள செந்த்ரா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட கரிபிரம்மா எக்ஸ்பிரஸ் ரயிலின் எஞ்சினில் திடீரென தீப்பற்றியது. இதனை அறிந்த லோகோ பைலட் உடனடியாக ரயிலை நிறுத்தினார்.
இதையடுத்து அனைத்து பயணிகளுடம் ரயிலில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விரைவாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஷார்ட் சர்க்யூட் அல்லது தொழில்நுட்ப கோளாறால் என்ஜினில் தீ பற்றியிருக்கலாம் என கூறப்படுகிறது.