நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கவுள்ள முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. அடுத்த மாதம் 21ம் தேதி வரை இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், தேசிய விளையாட்டு ஆளுகை மசோதா, வணிக கப்பல் மசோதா, சரக்கு மற்றும் சேவை வரி திருத்தம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீடிப்பு உள்ளிட்ட மசோதாக்களை தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மழைக்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து பேட்டியளித்த கிரண் ரிஜிஜு, ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயார் என கூறினார்.