பள்ளிபாளையத்தில் கடனுக்காக கிட்னி விற்பனை செய்யும் சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், கடன் கொடுத்த நிதி நிறுவனம், தொழிலாளியை மிரட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் லட்சக்கணக்கானோர் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளாக விசைத்தறி தொழில் நலிவடைந்ததால், குடும்ப சூழ்நிலையைச் சமாளிக்கத் தொழிலாளர்கள் தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி உள்ளனர்.
அதிக வட்டிக்கு வாங்கிய கடனை கட்ட முடியாமல் கிட்னியை விற்று பணத்தைச் செலுத்தும் அவலநிலைக்கு விசைத்தறி தொழிலாளர்கள் தள்ளப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கடனை செலுத்த முடியாத ஒரு தொழிலாளியை, நிதி நிறுவன ஊழியர்கள் கடுமையாக மிரட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.