ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வழக்கில் தேடப்படும் நபர் புகைப்படத்துடன் கூடிய போஸ்டரை காவல்துறையினர் 4 மொழிகளில் வெளியிட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் பள்ளி சிறுமியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ந்நிலையில், குற்றவாளியை கண்டிபிடிக்க உதவுமாறு கூறி குற்றவாளியின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டரை காவல்துறையினர் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய 4 மொழிகளில் வெளியிட்டுள்ளனர். இதனை பொதுமக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.