உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து குடியரசுத் தலைவர் கேள்விகள் எழுப்பியது தொடர்பான வழக்கில் அனைத்து மாநில அரசுகளுக்கும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க உச்சநீதிமன்றம் காலவரம்பு நிர்ணயித்திருந்தது.
இது தொடர்பாக விளக்கம் கேட்டு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கடிதம் அனுப்பியிருந்தார்.
அதில், மசோதாக்கள் குறித்து முடிவு எடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்க முடியுமா உள்ளிட்ட 14 கேள்விகளை அவர் எழுப்பியிருந்தார்.
இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் விசாரணைக்கு வந்தது, அப்போது, குடியரசுத் தலைவரின் கேள்விகள் தொடர்பாக மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.