தொழில்நுட்ப கோளாறு காரணமாகக் கேரளாவில் தரையிறக்கப்பட்ட பிரிட்டன் நாட்டுக்குச் சொந்தமான போர் விமானம் மீண்டும் சொந்த நாட்டுக்கே புறப்பட்டுச் சென்றது.
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான எப் – 35 ஜெட் விமானம், கடந்த மாதம் 14-ம் தேதி, இந்திய விமானப் படையுடன் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டது.
திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அந்த விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
பிரிட்டனில் இருந்து வந்த விமானப்படை பொறியாளர்கள், விமானத்தின் பழுதை சரி செய்தனர். இதையடுத்து, எப் – 35 போர் விமானம் பிரிட்டன் புறப்பட்டுச் சென்றது.