கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குண்டுகள் வினியோகம் செய்ததை டெய்லர் ராஜா ஒப்புக்கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை ஆர்.எஸ்.புரம் உட்பட பல்வேறு இடங்களில் கடந்த 1998-ம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதுதொடர்பாக 28 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி டெய்லர் ராஜாவை கடந்த 9-ந் தேதி போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து 5 நாட்கள் நீதிமன்ற காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டெய்லர் ராஜாவுக்கு மீண்டும் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், டெய்லர் ராஜாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சிறை ஜெயிலர் பூபாலன், ஜெயப்பிரகாஷ் கொல்லப்பட்ட வழக்குகளில் தனக்கான தொடர்பை அவர் ஒப்புக்கொண்டதாகவும், கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குண்டுகள் வினியோகம் செய்ததை ஒப்புக்கொண்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.