திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து பாமகவினர் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர்.
ஆரம்பாக்கத்தில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்த 8 வயது சிறுமியை, ஒருவர் இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பி ஓடினார். இந்த சம்பவம் தமிழக மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் சிறுமிக்கு நியாயம் கேட்டு பல தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆரம்பாக்கம் காவல்நிலையம் முன்பாக அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என உறுதி அளித்தனர்.
பாமகவினர் நடத்திய இந்த போராட்டத்தின் போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், தன்னை காவலர்கள் தாக்கியதாகவும், பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட நபர் போல தான் இருப்பதாக கூறி தன்னை துன்புறுத்தியதாகவும் தெரிவித்தார். மதுபோதையில் அவர் பேசியது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது.