காரையார் சொரிமுத்தையனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள காரையார் சொரிமுத்தையனார் கோயிலில் நடைபெறவுள்ள ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்காகச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பக்தர்களின் வசதிக்காகக் கோயில் வளாகத்தில் ஆயிரத்து 500 குடில்கள் மற்றும் 200 தற்காலிக கழிவறைகள், குடிநீர் மற்றும் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இன்று முதல் 25ஆம் தேதி வரை அகஸ்தியர்பட்டி பகுதியில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 200க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.