காலநிலை மாற்றம் மற்றும் மாசுபாடு காரணமாக ஆர்டிக் பகுதியில் துருவக் கரடிகள் எவ்வாறு பாதிப்பிற்குள்ளாகின்றன என்று ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
துருவக் கரடிகளின் திசு மாதிரிகளைச் சேகரித்து மேற்கொள்ளப்படும் பயாப்ஸி ஆய்வு மூலம், அவற்றின் ஆரோக்கியம், இனப்பெருக்கத்திறன், நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் மாசுபாடு காரணமாக அவற்றின் உடலில் ஏற்படும் நச்சுக்களையும் கண்டறிய முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
காலநிலை மாற்றமும், சூழல் மாசுபாடும் துருவக் கரடிகளின் ஆரோக்கியத்தைப் பாதிப்பதும், இதனால் அவைகள் தங்களது வாழ்விடத்தை மாற்றியமைக்கப் போராடுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.