உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இருநாடுகளுக்கும் இடையேயான இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 2 பேர் கொல்லப்பட்ட நிலையில் 15 பேர் காயமடைந்தனர்.