அஞ்சல்துறை ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பாகச் சென்னை தி.நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊக்கப்பணி மற்றும் உள்ளக ஊழியர்களுக்கு வணிக குறிக்கோள்களை ஒதுக்குவதை நிறுத்த வேண்டும், ஊரக தபால் ஊழியர்கள் மற்ற அலுவலகங்களுடன் இணைக்கப்பட்ட பணிகளால் ஏற்படும் துன்புறுத்தல்களை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை தி நகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்று காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், பெண் ஊழியர்களுக்குத் தனி கழிவறை மற்றும் ஓய்வறைகளை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.