காஞ்சிபுரம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை இரும்பு ராடால் தாக்கிவிட்டுத் தப்பியோடிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த அஸ்வினி என்பவர் தனது குழந்தைகளுடன் தனியே வசித்து வந்தார். அஸ்வினியை பார்ப்பதற்காக அவரது பெற்றோர் சென்றபோது அங்கு உடலில் ஆடைகளின்றி ரத்த காயத்துடன் அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், அஸ்வினியை மீட்டு, சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.