குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பதவி விலகிய நிலையில், விரைவில் குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்த நிலையில், மாநிலங்களவை செயலாளர் பிரமோத் சந்திரா மோடியை குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான அதிகாரியாக இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. மாநிலங்களவை இணைச் செயலாளர் கரிம் ஜெயின், இயக்குநர் விஜய்குமார் ஆகியோர் உதவி தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.