அந்நிய நாடுகளின் வான்வழி தாக்குதல்களை முறியடிக்க உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி மானெக்ஷா மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்களை, இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்ததாகவும், இதன் மூலம் இந்திய எல்லை பகுதியில் எந்தப் பாதிப்பும் நமக்கு ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.