இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. .
இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி 2-க்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் 4வது டெஸ்ட் தொடர் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 358 ரன்கள் அடித்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 2வது இன்னிங்சில் விளையாடிய இந்தியா, 4 விக்கெட் இழப்புக்கு 425 ரன்கள் அடித்தது. இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ரன்களை விட இந்திய அணி முன்னிலை பெற்ற நிலையில் போட்டியை ‘டிரா’ செய்ய இரு அணிகளும் ஒப்புக் கொண்டன.
இந்தப் போட்டியில் சுப்மன் கில் 103 ரன்களும் ஜடேஜா 107 ரன்களும் அடித்து விளாசினர். வரும் 31-ம் தேதி 5வது டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது. அதேநேரம் 2-க்கு 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்ய இந்திய அணி போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது..