ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் கன அடி நீர்வரத்து வருவதா கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கர்நாடகா அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு அதிகப்படியான உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் கன அடி நீர்வரத்து காணப்படுகிறது.
நீர்வரத்து மேலும் உயரக்கூடும் என்பதால் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் சுற்றுலா பணிகள் அருவிகளில் குளிக்கவும், பரிசல் செல்லவும் மாவட்டம் நிர்வாகம் விதித்துள்ள தடை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அருவிக்கு செல்லும் நடைபாதை பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.