தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழாவை ஒட்டி நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.
குற்றாலத்தில் ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் சாரல் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டிற்கான சாரல் திருவிழா கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. நிறைவு நாளில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.
இதில் உலகிலேயே உயரம் குறைவான சிகுவா முதல் கிரேடன் வரையிலான 30 இனங்களைச் சார்ந்த 140 நாய்கள் கலந்து கொண்டன.
ஆரோக்கியம், கீழ்ப்பணிதல், அந்த இனத்திற்குரிய குணம் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த நாய் தேர்வு செய்யப்பட்டது.