தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த இளைஞரை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த ராகேஷ் என்ற 25 வயது இளைஞர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நாகோல் பகுதியில் உள்ள பேட்மிண்டன் விளையாட்டு அரங்கத்தில் நண்பர்களுடன் ராகேஷ் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்தார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் ராகேஷ் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.